எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 47 குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்த மாமனிதர்!
Maharaja B | 17 Jul 2020, 06:12 AM
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட 47 எச்ஐவி குழந்தைகளுக்கு அடைக்கல அன்னையாக திகழ்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த சாலமன் ராஜ்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது எச்ஐவி பாசிட்டிவ் குழந்தைகளுக்கான தனியார் தொண்டு நிறுவனம். ஷெல்டர் டிரஸ்ட் (Shelter Trust) என்ற பெயரில் அறியப்படும் இந்த காப்பகத்தில் 47 தத்தெடுக்கப்பட்ட எச்ஐவி பாசிட்டிவ் குழந்தைகள் ஒரு தனி நபரின் அடைக்கலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

பெற்றோர்-உறவினர்களால் கைவிடப்பட்ட இளம் பிஞ்சுகளுக்கு அடைக்கல அன்னை போன்று இருந்து ஒரே குடையின் கீழ் காத்து வருகிறார் இந்த மனிதர்.

அவர் தான் தங்கியுள்ள இடத்திலேயே ஒரு அறக்கட்டளையை நிறுவியதோடு, பாதிக்கப்பட்ட குழந்தைகளை பேணி காத்து வருகிறார். இவருக்கு 11 ஊழியர்கள் பக்கபலமாக இருந்து, எச்ஐவி பாசிட்டிவ், குழந்தைகளை கவனித்துக்கொள்கின்றனர்.

முதன் முதலில் ஒரு நண்பர் மூலம் எச்ஐவி பாதிப்புக்குள்ளான சிறுவனைப் பற்றி அறிந்துகொண்ட இவர், குடும்பத்தை இழந்த அச்சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்து காக்க எண்ணி தொடங்கப்பட்டதே இந்த அறக்கட்டளை.

முதலில் உடன் இருந்தவர்கள் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டு அஞ்சுவதோடு, அவர்களை புறக்கணித்து வந்தனர். அவர்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை விதைத்து, இந்தக் குழந்தைகளும் வாழ வேண்டியவர்களே என்பதை உணர்த்தி, அவர்களின் அறியாமையை களையச் செய்தார்.

மேலும், எச்ஐவி குழந்தைகளுடன் வாழ்வது மிகவும் சாதாரணமானது என்பதை மக்களுக்குக் காட்டவும் முடிவு செய்தார்.

ஆனால், அவர்களை கவனித்துக்கொள்வதற்கு அவருக்கு நிறைய உதவி தேவைப்பட்டபோது, ​​உதவ யாரும் முன்வரவில்லை. உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா?, ஆம், இதே எச்ஐவி பாதிப்புக்குள்ளான கணவரை இழந்த பெண்கள், பாலியல் தொழிலாளர்களை உட்படுத்தி குழந்தைகளை கவனிக்கச் செய்தார்.

இந்த மையத்தில் வாழும் குழந்தைகள், அவரை 'அப்பா' என்றே அழைக்கிறார்கள். அக்கறையுள்ள தந்தையாக அவர் அவர்களின் கல்வி மற்றும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

சில வேளைகளில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வேதனையை உணர்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க முற்படும் போது பொருளாதாரம் தடையாக இருக்கிறது.

குழந்தைகளை பேணி காக்க பல்வேறு வழிகளில் சாலமன் போராடி வருகின்றார். எந்த ஒரு பாவமும் அறியாத இளம் பிஞ்சுகளின் வாழ்க்கை மலர, அன்பு உள்ளம் கொண்ட மனிதர்களின் உதவியை நாடுகிறார் இந்த மாமனிதர்.

எச்ஐவி பாசிட்டிவ் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வாதாரத்தை வழங்க அவருக்கு இப்போது உங்கள் உதவி தேவை.

விருப்பமுள்ள நல்லுள்ளம் படைத்த பெருமக்கள் முன்வந்து இக்குழந்தைகளுக்காக உதவ வேண்டுகிறோம்.

தங்களால் இயன்ற உதவியை செய்ய இந்த வங்கி கணக்கை தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

UPI: rzpy.givetomlpsolomon0001@hdfcbank

Or

Virtual account name: Shelter Trust - Milaap
Account number: 2223665747551144
IFSC code: RATN0VAAPIS
Bank name: RBL

மேலும் விவரங்களுக்கு:

Milaap Social Ventures India Pvt. Ltd.
No. 57, 1st Floor, 1st Main Road, Opp. Mini Forest, 3rd Phase, J P Nagar,
Bangalore, Karnataka, India 560078

milaap.org/fundraisers/support-shelter-home